Breaking News

தொழில் வரி உயர்வு.. சாலைகளில் திரியும் மாடுகள் அபராதம் உயர்வு.. அம்மா உணவகங்களுக்கு நிதி.. சென்னை மாநகராட்சி தீர்மானம்

அட்மின் மீடியா
0

தொழில் வரி உயர்வு.. சாலைகளில் திரியும் மாடுகள் அபராதம் உயர்வு.. அம்மா உணவகங்களுக்கு நிதி.. சென்னை மாநகராட்சி தீர்மானம்

 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது. 

மேயர் பிரியா தலைமையில் இந்த மாதாந்திர கூட்டம் தொடங்கியது.மாநகராட்சி கூட்டத்தில் 40க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வரி வசூல் நடைபெற்றது.அதன்பின்பு தற்போது தொழில் வரியை 35 சதவீதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவற்றப்பட்டுள்ளது 

மாத வருமானம் ரூ.21,000-க்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை 

ரூ.21,000 - 30,000 வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆக உயர்வு 

ரூ.30,000 - 45,000 வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி ரூ.315-லிருந்து ரூ.430 ஆக உயர்வு 

ரூ.45,000 -60,000 வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி ரூ.690-லிருந்து ரூ.930 ஆக உயர்வு

சென்னை மாநகராட்சியின் சாலையில் திரியும் மாடுகள் பிடிபட்டால் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதம் 5000 ரூபாயில் இருந்து10, 000 ரூபாயாக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

அதன்படி, முதல்முறை மாடு பிடிபட்டால் ரூ.10,000, 2 வது முறை பிடிபட்டால் ரூ.15,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் 2 நாட்களுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், 3வது நாளில் இருந்து கால்நடைகளில் பராமரிப்பு செலவுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அம்மா உணவகம்தொடர்ந்து அம்மா உணவகத்தில் உள்ள பழுதான இயந்திரங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பாத்திரங்கள் தொடர்பான குற்றசாட்டு வந்த நிலையில், தற்போது அவற்றை மாற்ற ரூ. 7.6 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback