Breaking News

கோயம்பேட்டில் இருந்து கூடுவாஞ்சேரி, மற்றும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் பேருந்து தடம் எண் மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோயம்பேட்டில் இருந்து கூடுவாஞ்சேரி, மற்றும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் பேருந்து தடம் எண் மாற்றம் முழு விவரம்

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளின் தடம் எண் மாற்றம்

பழைய எண்கள்:-

கோயம்பேடு - கிளாம்பாக்கம் - 104c cut

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி - 104c

புதிய எண்கள்:-

கோயம்பேடு - கிளாம்பாக்கம் - 104c

கோயம்பேடு - கூடுவாஞ்சேரி - 104cx

 


இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் தடம் எண்கள் மாற்றம் - மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்.

மாநகர் போக்குவரத்துக் கழகம் பொது மக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் எண் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C cut பேருந்து, தடம் எண்.104C என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண்.104C பேருந்து, தடம் எண்.104CX என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback