கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
திமுகவை சார்ந்த நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ஆகியோரின் தங்களின் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா கடிதம் சிறப்புக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-
தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
மேலும், ஆணையத்திற்கு ஏறகனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்