உத்திரபிரதேசத்தில் லவ் ஜிகாத்க்கு ஆயுள் தண்டனை மசோதா அறிமுகம்
உத்திரபிரதேசத்தில் லவ் ஜிகாத்க்கு ஆயுள் தண்டனை மசோதா அறிமுகம்
உத்தர பிரதேசத்தில், 'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
உ.பி.,யில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில், உ.பி., சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டம் -- 2024 ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்நிலையில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில், சட்ட விரோத மதமாற்ற தடை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சட்டத்திருத்த மசோதாவை, சட்டசபையில் மாநில அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.
நாளை மறுதினம் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
லவ் ஜிகாத்' என்றால் என்ன?
இந்து மதத்தை சேர்ந்த பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றி, மதமாற்றி திருமணம் செய்து கொள்வதாக இந்துத்துவ வலதுசாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பவே வலதுசாரிகள் இப்படி செய்தவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மீட்பு பணிகள் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2024/07/blog-post_715.html
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்