Breaking News

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.மேயர் பதவியை தக்கவைத்தார்

அட்மின் மீடியா
0
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.
 

காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஒரு கவுன்சிலர்கூட பங்கேற்காத நிலையில், தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

51 வாா்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த திருமதி மகாலட்சுமி யுவராஜ் உள்ளாா். 

அவருக்கு எதிராக எதிா்க்கட்சிகளை சோ்ந்த உறுப்பினா்கள் பல்வேறு புகாா்களை கூறி வந்தனர் 

மேலும் சில திமுக உறுப்பினா்களும் அவருக்கு எதிராக இருந்துவந்தனர். இந்நிலையில், மேயா் தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகனிடம் மனு அளித்தனா்.

இந்நிலையில் ஜூலை 29 காலை 10 மணிக்கு தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தலைமையில் தொடங்கியது. ஆனால், மேயர், ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் என யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கவுன்சிலர்கள் ஒருவர்கூட கூட்டத்திற்க்கு வருகை தராததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து தனது மேயர் பதவியை மகாலட்சுமி தக்க வைத்தார்

மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையந்ததால் மீண்டும் ஒரு வருடத்துக்கு பிறகு தான் தீர்மானம் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback