Breaking News

நிலாவில் கண்டுபிடிக்கப்பட்ட குகை மனிதர்கள் வாழலாம் என தகவல் cave on the moon

அட்மின் மீடியா
0

நிலாவில் கண்டுபிடிக்கப்பட்ட குகை மனிதர்கள் வாழலாம் என தகவல்

நிலவில் முதன்முறையாக குகை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும், இந்த குகையானது, குறைந்தது 100 மீ ஆழத்தில் இருக்குமெனவும் மனிதர்கள் வாழ பொருத்தமானதாக இருக்குமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 


மேலும், நிலவில் இதேபோல நிலப்பரப்புக்கு அடியில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்கலாம் என்றும், நிலாவில் உள்ள நிலத்தடியில் கண்டுபிடிக்கப்படாத மறைந்திருக்கும் நூற்றுக்கணக்கான குகைகளில் இதுவும் ஒன்று என ஆராய்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

இந்த குகைகள் பல மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன், நிலவில் எரிமலைக்குழம்பு வெளியேறியதால் இந்த குகை உருவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது

அதேபோல் நிலவில் காணப்படும் இந்த நிலத்தடி குகை, எதிர்கால விண்வெளி வீரர்களை தங்க வைக்க பயன்படும் எனவும் 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் சந்திரனில் காலடி எடுத்து வைத்த இடத்திலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமைதிக் கடலில் உள்ள திறந்த குழியிலிருந்து நிலத்தடி குகைக்கு செல்லமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இந்த குகைகளில்  சூரியனிலிருந்து நேரடியாக வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு, மைக்ரோமீட்டர் தாக்குதல் இவற்றிலிருந்து வீரர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும் என்றும் கூறுகின்றனர்.

Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback