மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள் முழு விபரம் Crowd Strike
மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள் முழு விபரம் CrowdStrike
மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளிட்ட பல துறைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
உலகம் முழுவதும் மைக்ரோ சாப்ட் 11 ஓஎஸ் திடீரென செயலிழந்துள்ளது இதனால் உலக அளவில் விமான சேவை, ஐடி துறை , பங்குச் சந்தைகள் , வங்கி சேவைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகள் திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயனர்கள் நீல நிற திரை சிக்கலை எதிர்கொண்டனர், மேலு கணினியினை ரீ - ஸ்டார்ட் செய்ய அல்லது ஷட்டவுன் செய்ய மட்டுமே செய்யமுடிந்தது, மைக்ரோசாப்ட் 365, எக்ஸ் பாக்ஸ், அவுட் லுக் உள்ளிட்டவை செயல்படாததால் உலகம் முழுவதும் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மைக்ரோசாப்ட்டின் இந்த திடீர் செயலிழப்புக்காண காரணம் தெரியவில்லை.இந்த தொழில் நுட்பக்கோளாறால் பல தகவல் தொடர்பு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தச் சிக்கலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மைக்ரோசாஃப்ட் மென் பொருள் கோளாறு காரணமாக மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்