இன்ஸ்டகிராம் மூலம் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி முழு விவரம் Dubai princess Sheikha Mahra Divorce
திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், துபை இளவரசி ஷைகா மஹ்ரா, தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஜூலை 17) அறிவித்துள்ளார்.
திருமணமாகி ஒரு வருடமான நிலையில், கணவரை விவாகரத்து செய்ததாக துபாய் இளவரசி ஷைகா மஹ்ரா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா, ‘துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார்.
இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது
துபாய் இளவரசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில்:-
விவாகரத்து செய்வதாக பகீரங்கமாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இளவரசி தனது பதிவில், “
அன்புள்ள கணவரே, நீங்கள் பிற துணைகளுடனே எப்போதும் சேர்ந்திருப்பதால், நான் இதன் மூலம் நம் விவாகரத்தை அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன், உங்களை விவாகரத்து செய்கிறேன், மேலும் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது கணவருடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்தும் நீக்கியுள்ளார்
இன்ஸ்டா பதிவு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.instagram.com/p/C9fXKgCS5_O/
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்