இ-பைக் பேட்டரியை லிப்டில் எடுத்து செல்லும் போது வெடித்தது என பரவும் வீடியோ எப்பொழுது நடந்தது, எங்கு நடந்தது காரணம் என்ன முழு விவரம் e bike battery in lift news fake or real
இ-பைக் பேட்டரியை லிப்டில் எடுத்து செல்லும் போது வெடித்தது என பரவும் வீடியோ எப்பொழுது நடந்தது, எங்கு நடந்தது காரணம் என்ன முழு விவரம்
பரவும் செய்தி :-
ஒரு நபர் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை லிப்ட்டுக்குள் கொண்டு செல்கிறார். லிப்ட் மூடப்படும் போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுகிறது. கவனமாக இருங்கள் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ 2021 ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்தது ஆகும்
ஆனால் தற்போது நடந்தது போல் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
நடந்தது என்ன முழு விவரம்:-
சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் லிப்டில் உணவு விநியோக ரைடர் முஹம்மது இர்பான் டேனிஷ் அசார் (20) அவர் எடுத்து சென்ற பேட்டரி திடீரென வெடித்து இறந்தார் இந்த சம்பவம் ஜூன் 3, 2021 அன்று இரவு 11.25 மணியளவில் பிளாக் 537 உட்லண்ட்ஸ் டிரைவ் 16 இன் ஒன்பதாவது மாடியில் நடந்துள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அவர் இறந்தது பேட்டரியை லிப்ப்டில் எடுத்து சென்றதால் தான் பேட்டரி வெடித்து இறந்தார் என பலரும் கூறிய நிலையில்
அவர் பைக்கில் வந்த பேட்டரியை அனுமதி இல்லாமல் அந்த பேட்டரியை தன் இஷ்டம் போல் மாற்றி வடிவமைத்துள்ளார் என கண்டறிந்தனர்
அதாவது பிஎம்டியில் 24ஏஎச் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் விசாரித்தது. அவர் அதை வாங்கும்போது PMD உடன் 15Ah பேட்டரி பேக் வந்தது.பிஎம்டியின் மோட்டாரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது, இது பயனர் அதிக வேகத்தில் சவாரி செய்ய அனுமதிக்கும்.
பேட்டரி பேக்கில் பேட்டரி மேலாண்மை அமைப்பு (பிஎம்எஸ்) இல்லை, இது அதிக சார்ஜ் அல்லது அதிக வெப்பமடைவதிலிருந்து பாதுகாக்கிறது," என்றம் "பிஎம்எஸ்ஸைக் கடந்து செல்வது பிஎம்டியை வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது, ஆனால் பேட்டரியில் இருந்து எதிர்பார்த்ததை விட அதிக மின்னோட்டம் எடுக்கப்பட்டிருக்கலாம், இதனால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள்.
அதாவது பேட்டரி நிலை காரணமாக பேட்டரி வெடிப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கும் காந்தப்புலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒரு மூடிய சுற்று இருக்கும்போது காந்தப்புலம் உருவாகிறது. பைக் அல்லது காரில் சார்ஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது, அது தானாகவே சார்ஜ் செய்வதை நிறுத்துகிறது, நீங்கள் அதனை மாற்றாதீர்கள்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.straitstimes.com/singapore/pmd-that-caused-fatal-fire-in-lift-non-compliant-coroner-s-inquiry-told
ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://9gag.com/gag/a0ZPMRv?utm_source=copy_link&utm_medium=post_share
ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.straitstimes.com/singapore/courts-crime/pmd-with-modified-battery-that-caught-fire-in-lift-man-s-death-ruled-a-misadventure
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ