ரிவர்ஸில் சுழல தொடங்கிய பூமியின் மையம் பகீர் கிளப்பும் ஆராய்சியாளர்கள் முழு விபரம் earth reverse rotation
ரிவர்ஸில் சுழல தொடங்கிய பூமியின் மையம் பகீர் கிளப்பும் ஆராய்சியாளர்கள் முழு விபரம்
பூமியின் மையமானது மெல்ல மெல்ல எதிர்ப்பிப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ளது.
நாம் வாழும் இந்த பூமி Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக அமைத்துள்ளது.
The Earth's layers are:
1. Crust: The outermost solid layer, ranging in thickness from 5-70 km.
2. Mantle: A thick layer of hot, viscous rock beneath the crust, extending from about 35 km to 2,900 km depth.
3. Outer Core: A liquid layer of iron and nickel, about 2,250 km thick.
4. Inner Core: A solid, iron-nickel alloy at the center of the Earth, with a temperature of around 5,000°C to 6,000°C (9,000°F to 11,000°F).
These layers vary in temperature, pressure, and composition, and are essential for understanding geological processes and the Earth's internal dynamics.
இயற்கையாக உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது. அதாவது நமது பூமி ஒட்டுமொத்தமாக ஒரு சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் உள்ளே இருக்கும் திடமான INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது. இந்த இன்னர் கோரின் சுழற்சி வேகம் மற்றும் திசை ஆகியவை குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது. முதலில் இந்த இன்னர் கோர் கண்டறியப்பட்டதில் இருந்து இதன் சுழற்சி கணிசமாக மாறிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் என NATURE ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது
பூமியின் இந்த மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளின் கூறி வரும் கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
INNER CORE ஆய்வு செய்வதில் முக்கிய சவால் என்னவென்றால் இன்னர் கோரை நேரடியாக பார்க்க முடியாது.அதை ஆய்வு செய்ய பூமியில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் போது அப்போது ஏற்படும் அலைகள் எந்த திசையில் வருகிறது என்பதை வைத்தே இந்த இன்னர் கோர் குறித்து மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வு கட்டுரையில் முதலில் இன்னர் கோர் ஒரே திசையில் தான் சுற்றும் என்றே ஆய்வாளர்கள் கருதினர்.1970களில் தான் முதல்முறையாக இன்னர் கோர் சுழலும் திசை அவ்வப்போதும் மாறும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போது அதைப் பலரும் ஏற்கவில்லை.. ஆனால் 90களில் இன்னர் கோர் திசை மாறுவதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன" என அதில் கூறப்பட்டுள்ளது, இந்த ஆய்வின் ஆசிரியர்களான, சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி “2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளது” என்று கண்டறிந்தனர்.
சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலழத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
Tags: தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்