தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியதில் உயிரிழந்த யானை வீடியோ Elephant hit by speeding train in Assam
தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியதில் உயிரிழந்த யானை வீடியோ Elephant hit by speeding train in Assam
அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஜாகிரோட் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை வேகமாக வந்த ரயில் விலங்கு மீது மோதியதில் ஆண் யானை இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற யானைமீது கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது
அசாம் மாநிலம் - ஜாகி ரோட் ரயில் நிலையம் அருகே இன்று மாலை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் யானை மீது,கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தண்டவாளத்தில் இருந்து சடலத்தை அகற்றினர் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டிலேயே கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக யானைகள் எண்ணிக்கையில் அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, இந்தியாவில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை கோவையில் வனத்துறை அமைத்தது போல இந்தியா முழுவதும் ரயில்வே துறையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/gopinathvijay91/status/1811247555566620744
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ