நடுக்கடலில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோ இணைப்பு Fire breaks out on Maersk container ship
குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு maersk frankfurt என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது.
இந்த கப்பல் கோவாவிற்கு தென்மேற்கே 102 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து அறிந்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று சரக்கு கப்பலில் பற்றி எரிந்த தீயை பலமணிநேரம் போராடி அணைத்தனர். மேலும், சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
கப்பலின் தற்போதைய நிலை கார்வாரில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ளது. கப்பலின் முன்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டாலும் கடும் புகை மூட்டமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/DDIndialive/status/1814355077714309273
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ANI/status/1814593080013586805
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ