இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்ல டேக்ஸ் கிலியரன்ஸ் சர்டிபிகேட் கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு from oct 1 Tax clearance certificate mandatory for leaving India
இந்தியாவில் இருந்து இனி வெளிநாடு செல்ல டேக்ஸ் கிலியரன்ஸ் சர்டிபிகேட் கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு from oct 1 Tax clearance certificate mandatory for leaving India
இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக பட்டு உள்ளது.
இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை அல்லது நிலுவையில் உள்ள வரியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அந்த சான்றிதழ் உறுதிப்படுத்தும். இது தொடர்பான சட்ட திருத்தம் வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதாவது இந்தியாவை விட்டு வெளியேறுபவர்கள் டேக்ஸ் கிலியரன்ஸ் சர்டிபிகேட் Tax clearance certificate எனப்படும் வரி பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் என கடந்த 23ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இது கட்டாயம் என கூறியுள்ளார்
இதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவை விட்டு வெளியேறும் எவரும் தங்களுக்கு வரி நிலவை எதுவும் கிடையாது என்பதற்கான உத்தரவாதமாக இருக்கக்கூடிய சான்றிதழை தாக்கல் செய்தாக வேண்டும்
வருமான வரி சட்டத்தின் பிரிவு 230 , இந்தியாவை சேர்ந்த எவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடமிருந்து வரி நிலுவையில் இல்லை என்பதற்கான சான்றிதழை பெற்றாக வேண்டும்.
ஒருவேளை அந்த நபர் வரிபாக்கி வைத்திருந்தால் அதனை செலுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதற்கான தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்