Breaking News

G pay, phonepe மூலம் வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்புவது எப்படி முழு விவரம் UPI International

அட்மின் மீடியா
0

G pay, phonepe மூலம் வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்புவது எப்படி முழு விவரம் UPI International

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமமின்றி பணப்பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.அந்த வகையில் இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணையவுள்ளது.

UPI International


டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்து நிலையில், பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. அந்த பட்டியிலில் தற்போது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளும் இணைந்துள்ளன.

பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபையில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும்

இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் நாடுகளுக்கு பயணிக்கு இந்தியர்கள் இனிமேல் யுபிஐ சேவை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். 

அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, அரேபியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், தற்போது இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

G pay, phonepe மூலம் வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்புவது எப்படி 

நாம் அனுப்பும் இந்திய ரூபாயை அந்நாட்டு பணமாக மாற்றுவதற்கு குறிப்பிடத்தக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் நாம் கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப யு.பி.ஐ சர்வதேச பேமெண்ட் ஆக்டிவேட் செய்ய வேண்டும்?

முதலில் நீங்கள் கூகுள் பே, போன் பே ஆப்பில் சென்று அதில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.

அடுத்து அதில் Payment Management பக்கத்தில் உள்ள UPI International ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

அடுத்து அதில் உங்கள் வங்கி கணக்கை செலக்ட் செய்து கிளிக் செய்யவும்

அடுத்து அதில் காட்டப்ப்டும் ஆக்டிவேட் பட்டனை செலக்ட் செய்து அதில் உங்கள் யு.பி.ஐ பின் உள்ளிட்டு ஆக்டிவேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும் அவ்வளவு தான்

அடுத்து யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் QR கோட் பெற்று அதை உங்கள் போனில் ஸ்கேன் செய்து  பணத்தை அனுப்பவும். தற்போது ஒரு ட்ரான்ஷாக்ஷனுக்கு 2,00,000 ரூபாய் வரை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும்.

Tags: தொழில் வாய்ப்பு வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback