திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் ICU வார்டில் அனுமதி முழு விவரம்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓர் ஆண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள்