Breaking News

தனிநபர் வருமானத்தில் ரூ.3லட்சம் வரை வரி கிடையாது நிர்மலா சீதாராமன் அறிவிப்பு income tax union budget 2024

அட்மின் மீடியா
0
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விலக்கு என்பது பெரும் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. 



தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை:

தனிநபர் வருமான வரி ரூ.0-3 லட்சம் வரை வரி கிடையாது.

தனிநபர் வருமான வரி ரூ.3-7 லட்சம் வரை 5% வரி.

தனிநபர் வருமான வரி  ரூ.7-10 லட்சம் வரை 10% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.10-12 லட்சம் வரை 15% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.12-15 லட்சம் வரை 20% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி.

நிரந்தரக் கழிவுக்கான வரம்பு வரிப் பிடித்தம் அளவு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்வு . எனவும் வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை என அறிவிப்பு

புதிய வரி முறையின் கீழ், தனிநபரின் நிகர வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருந்தால், பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி பெறலாம். தள்ளுபடி தொகை வருமான வரியில் 100 சதவீதம் அல்லது ரூ 25,000 ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback