Breaking News

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு என பரவும் தகவல் பொய்யானது உண்மை என்ன itr date extension fake

அட்மின் மீடியா
0

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு என பரவும் தகவல் பொய்யானது உண்மை என்ன

 


வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி 31 -8 - 2024 என நீட்டிக்கப்பட்டுள்ளது என சமூகவலைதளங்களில் ஓர் செய்தி பரவி வருகின்றது ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செய்தி காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை, இன்றே உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யுங்கள்

ஐடிஆர் ரிட்டர்ன் காலக்கெடு தொடர்பான போலி செய்திகள் குறித்து வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியில் ஐடிஆர் மின்-தாக்கல் செய்வதற்கான தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது போலியானது என்று மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2023-24 நிதியாண்டிற்கான உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்று. ஜூலை 31, 2024க்குள் தங்கள் ஐடிஆரைச் சமர்ப்பிக்கத் தவறிய வரி செலுத்துவோர், தாமதமாகத் தாக்கல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்படலாம் மேலும் வருமான வரித் துறையின் கூடுதல் நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும் எனவே பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்

மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

https://x.com/PIBFactCheck/status/1818316695636681137

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback