Breaking News

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு maintenance to Muslim women against Islam

அட்மின் மீடியா
0

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு maintenance to Muslim women against Islam

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோரலாம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு, இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது மேலும்  இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து சட்ட வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அந்த வாரியம் கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.அனைத்து மதத்தைச் சோ்ந்த திருமணமான பெண்களுக்கும் இந்த சட்டப் பிரிவு பொருந்தும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 

அனுமதிக்கப்பட்ட அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் வெறுக்கத்தக்கது விவாகரத்து என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளதை வாரியம் வலியுறுத்தியது, 

இருப்பினும், திருமண வாழ்க்கையைப் பராமரிப்பது கடினமாக இருந்தால், விவாகரத்து மனிதகுலத்திற்கு ஒரு தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது, என்று அது கூறியது.

ஆனால் இந்த தீர்ப்பு அவர்களின் வலிமிகுந்த உறவில் இருந்து வெற்றிகரமாக வெளியே வந்த பெண்களுக்கு மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய சட்டத்துக்கு எதிராக உள்ள இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான சட்ட ரீதியிலான அனைத்து வழிமுறைகளையும் ஆராய அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய தலைவா் காலித் சைஃபுல்லா ரஹ்மானிக்கு வாரியம் தரப்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AIMPLB_Official/status/1812460312463081728

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback