விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு Muslim Woman Can Seek Maintenance From Husband
விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு Muslim Woman Can Seek Maintenance From Husband
விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்கள் ஜீவனாம்சம் கோர முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
விவாகரத்து பெற்ற முஸ்லீம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து கணவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஏ.ஜி.மசி அமர்வு உத்தரவு அளித்துள்ளது. சிஆர்பிசி 125-ஆவது பிரிவு திருமணமான பெண்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் தனது முன்னாள் கணவனிடமிருந்து பராமரிப்பு தொகையினை பெற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு விவரம்:-
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவர் அவரது முன்னாள் மனைவிக்கு பராமரிப்பு தொகையினை வழங்க வேண்டும் என கடந்த 2023 ஆம் ஆண்டு தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவினை விசாரனை செய்த உச்சநீதிமன்றம்
இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி, விவாகரத்தான இஸ்லாமிய பெண் தனது முன்னாள் கணவனிடமிருந்து குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்சம் பெறுவதை எந்த வகையிலும் தடுக்கவில்லை என தீர்ப்பளித்துள்ளது.
மேலும், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விவாகரத்து செய்த மனைவிக்கு பராமரிப்பு தொகையினை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வழக்கு விவரங்கள் தீர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.livelaw.in/high-court/delhi-high-court/arvind-kejriwal-oppose-bail-cancellation-delhi-high-court-ed-262862?infinitescroll=1
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி