விண்வெளியில் இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் வீடியோவை வெளியிட்ட நாசா new Webb image shows 2 galaxies
விண்வெளியில் இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் வீடியோவை வெளியிட்ட நாசா
விண்வெளியில் இரண்டு விண்மீன் திரள்கள் இணையும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்த அரிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, கடந்த 2021-ம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் புதிய புகைபடங்களை நாசா வெளியிட்டு உள்ளது.
பெங்குயின் மற்றும் எக் என அழைக்கப்படும் 2 விண்மீன் திரள்கள் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஹைட்ரா விண்மீன் தொகுப்பில் அமைந்து உள்ளன.
இந்த விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.
நாசா வெளியிட்டுள்ள வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=SQ2jLnq_Gj8&t=182s
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்