வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் பாஸ்டேக் ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் முழு விவரம் No FASTag on Front Windshield double toll charge
முன்பக்க கண்ணாடியில் பாஸ்டேக் ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் முழு விவரம் No FASTag on Front Windshield double toll charge
சுங்கச்சாவடியைக் கடக்கும்போது மட்டும் ஸ்டிக்கரை முன்பக்க கண்ணாடியில் காட்டுவதால் காலதாமதம் ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்.
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டாவிட்டால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக முன்பக்கக் கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ ஒட்டியிருக்க வேண்டும். அப்படி ஒட்டாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம் எனவும்
பல வாகன ஓட்டிகள் காருக்குள் ‘ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை வைத்துக் கொண்டு சுங்கச் சாவடியைக் கடக்கும்போது மட்டும் அதைக் கையில் எடுத்து முன்பக்கக் கண்ணாடியில் காட்டுகின்றனா். இதனால், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த இரு மடங்குக் கட்டணம் தொடா்பான அறிவிப்பை சுங்கச் சாவடியின் முன்பகுதியிலேயே பெரிய அளவில் எழுதி வைக்க வேண்டும்.‘ஃபாஸ்டேக்’ ஸ்டிக்கரை காரின் முன்பக்க கண்ணாடியில் உள்பக்கமாக ஒட்ட வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு