Breaking News

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இலவச வீடு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் pradhan mantri awas yojana apply online

அட்மின் மீடியா
0

pradhan mantri awas yojana apply online பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இலவச வீடு பெற விண்ணப்பிக்க வேண்டுமா.

ரூ 2.67 லட்சம் வரை அரசு மானியம் பெற்று புது வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி? 

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

இது ஒரு மத்திய அரசு திட்டமாகும்.ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும்.மொத்த மதிப்பீடு ரூ.170000 ஆகும். 

இதில் மத்திய அரசு நிதி (ரூ.72,000) + மாநில அரசு நிதி (ரூ.48,000) + மேற்கூரை அமைக்க மாநில கூடுதல் நிதி (ரூ.50,000).மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12,000/- மதிப்பிலான கழிப்பறை கட்டிதரப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழான மனிதசக்தி நாட்களை கொண்டு 90 நாட்களுக்கு வீடு கட்டப்படுகிறது. (90 X ரூ.205 = ரூ.18450)சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

தேவையான ஆவணங்கள்:-

Before submitting your demand under the PMAY-U 2.0 scheme, please ensure you have the following documents ready:

1. Applicant's Aadhaar details (Aadhaar number, name as per Aadhaar, date of birth).

2. Aadhaar details of family members (Aadhaar number, name as per Aadhaar, date of birth).

3. Active bank account details of the applicant (account number, bank name, branch, IFSC code) linked with Aadhaar.

4. Income proof certificate

5. Caste certificate (In case of SC, ST or OBC)

.6. Land document (In case of BLC vertical).


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்றால் என்ன?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது இந்திய அரசாங்கத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் தரமான வீடுகளை வழங்குவதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://pmay-urban.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும். 

அதில் உள்ள Apply for PMAY-U 2.0 என்பதைக் கிளிக் செய்யவும் 

அடுத்து வரும் பக்கத்தில் Apply for PMAY-U 2.0  என்பதை தேர்ந்தெடுக்கவும். 

அதன் பின்னர் வரும் திரையில் Instructions for the user என்பது வரும் அதன் கீழ் சென்று CLICK TO PROCEED என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து வரும் பக்கத்தில் தேவையான ஆவணங்கள் பட்டியல் விவரம் காண்பிக்கப்படும் அதனை படித்து பார்த்து ஆவணங்களை எடுத்து வைத்து கொள்ளவும் அதன் கீழ் PROCEED என்பதை கிளிக் செய்யவும்

அதன்பின்பு உங்களது தனிப்பட்ட விவரங்கள், கேட்கும் அதனை பூர்த்தி செய்து அதன்பின்பு உங்கள் ஆதார் ,வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். 

விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும். 

உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback