Breaking News

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ரிங் சிறப்பம்சங்கள் முழு விவரம் Samsung Galaxy Ring features

அட்மின் மீடியா
0

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ரிங் சிறப்பம்சங்கள் முழு விவரம்

சாம்சங் நிறுவனம் தனது புதிய Samsung Galaxy Ring மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்மார்ட் வாட்ச் போல் இயங்கும் இந்த சாதனத்தை மோதிரத்தை போல் விரலில் அணிந்து கொள்ளலாம்.வாட்டர் புரூப் சக்தியை கொண்டுள்ளது.

சாம்சங் கேக்ஸி இசட் பிளப் 6, 

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 

சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா 

மாடல்களுடன் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் அறிமுகம் செய்துள்ளது. 

டைட்டானியம் பிளாக் (Titanium Black), 

டைட்டானியம் சில்வர் (Titanium Silver) 

டைட்டானியம் கோல்டு (Titanium Gold) நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட் ரிங் மாடல்  வெளிவந்துள்ளது.


கேலக்ஸி ரிங் முக்கிய அம்சங்கள்:-

உறக்கம் : சாதனம் தூக்கத்தின் போது ஒரு நபரின் இயக்கம், தூக்க தாமதம், இதயம் மற்றும் சுவாச வீதம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் மற்றும் தூக்கத்தின் தரத்தை பகுப்பாய்வு செய்ய முடியும்.

மாதவிடாய் சுழற்சி : ஒரு நபரின் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்க தோலின் வெப்பநிலையைப் பயன்படுத்துவதாக சாம்சங் கூறுகிறது.

இதயத் துடிப்பு : கேலக்ஸி ரிங் பயனர்களின் இதயத் துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது அவர்களுக்குத் தெரிவிக்கும். பயனர்கள் தங்கள் இதயத் துடிப்பை நிகழ்நேரத்திலும் சரிபார்க்கலாம்.

உடற்பயிற்சி : Galaxy Ring ஒரு நபர் செய்யும் உடற்பயிற்சி அல்லது செயல்பாட்டைக் கண்டறிய முடியும்

நீங்கள் வாங்கும் அளவைப் பொறுத்து, Galaxy Ring 2.3 கிராம் முதல் 3 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். சாதனம் மூன்று வண்ணங்களில் வருகிறது.


சிறப்பம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி ரிங் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள் வரை பேட்டரி பேக்கப் இருக்கும்

மேலும் ஒரு முறை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களில் இதன் பேட்டரியை 40 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் 

எல்இடி லைட்களுடன் கூடிய சார்ஜிங் 

24/7 ஹெல்த் மானிட்டர் 

ஸ்லீப் பாட்டர்ன்

ஹார்ட் ரேட் மானிட்டர்

சுவாச விகிதம் 

அட்வான்ஸ் சைக்கிள் டிராக்கிங் 

பைண்ட் மை ரிங் அம்சம்

ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார் 

இதன் விலை $399 (இந்திய ரூபாயில் தோராயமாக ரூ. 34,000) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.35,000 ஆகும்

இந்த ஸ்மார்ட் ரிங் வருகிற ஜூலை 24 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.samsung.com/us/rings/galaxy-ring/

Galaxy Ring features

Menstrual cycle: Samsung says it uses skin temperature to help track a person’s menstrual cycle.

Heart rate: The Galaxy Ring can inform users when their heart rate is unusually high or low. Users can also check their heart rate in real time.

Exercise: The Galaxy Ring can detect the kind of workout or activity a person is doing

Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback