Breaking News

கடல் பசு என பரப்படும் வீடியோ உண்மை என்ன முழு விபரம் sea cow fake video

அட்மின் மீடியா
0

கடல் பசு என பரப்படும் வீடியோ உண்மை என்ன முழு விபரம் sea cow fake video

பரவி வரும் செய்தி:-

எங்கும் காண கிடைக்காத அற்புதம் கடல்பசு பாரீர், இதை பார்க்க கொடுத்து வைத்து இருக்கவேண்டும். 

அந்த வீடியோவில் ஒரு பசுவின் தலையைக் கொண்ட கடல் உயிரினத்தைக் காட்டுகிறது.

 


உண்மை என்ன :-

தற்போது பலரும் ஷேர் செய்து வைரல் ஆகும் அந்த வீடியோ உண்மை இல்லை அது ஓர் கிராபிக்ஸ் வீடியோ ஆகும்

அந்த வீடியோ AI ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும்

முதலில் இதுபோன்ற ஓர் வித்தியாசமான உயிரினம் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டிருந்தால், அது  செய்தியாக வந்திருக்கும் ஆனால் உலகில் அது போல் ஓர் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த ஓர் செய்தியும் கிடைக்கவில்லை

அந்த வீடியோவை சற்று உற்று நோக்கினால், பச்சை நிற பூட்ஸ் அணிந்தவர்களில் ஒருவர் பின்னணியில் நடப்பதைக் காணலாம். ஆனால் அவர் நடக்கும்போது, ​​வேறொரு கால் அவர்களின் துவக்கத்திற்கு அருகில் தோன்றுகின்றது 


மேலும் இதுபோன்ற பல வீடியோக்களை டிஜிட்டல் கிரியேட்டர்கள் Facebook க்கில் பதிவிட்டுள்ளார்கள்.அங்கு நீங்கள் பல வீடியோக்களை பார்க்கலாம்.அவை அனைத்தும் உங்களை வியக்க வைக்கும் .


அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.facebook.com/profile.php?id=61561001975845&sk=reels_tab

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback