Breaking News

தமிழ்நாடு மின்சார வாரியம் TANGEDCO வை இரண்டாகப் பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மின்சார வாரியம் TANGEDCO வை இரண்டாகப் பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல்

மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது,


அதில் ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும்,

மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

அதாவது தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி துறை என ஒன்றாகவும் விநியோகத்துறை என ஒன்றாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினை, தமிழ்நாடு மின் உற்பத்தி கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என பிரித்ததற்கு தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை ஜனவரி 2024ல் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில்,மத்திய அரசின் வர்த்தகத்துறை விதிகளின்படி செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback