Breaking News

இன்ஜினியரிங் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு பார்க்க இங்கு கிளிக் செய்யவும் TNEA Rank List 2024

அட்மின் மீடியா
0

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவையும் அடங்கும். 

இந்த கல்லூரிகளில் பி.இ., பி டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் ஒற்றை சாளர முறையில் இணைய வழி பொது கலந்தாய்வு மூலம் இவை நிரப்பப்படும். அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணைய வழி விண்ணப்ப பதிவு இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு லட்சத்து 98,853 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி சமவாய்ப்பு எண் இணையவளையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13 முதல் 30 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில் பி.இ., பி.டெக், உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை 10:30 மணிக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீர ராகவன் அவர்கள் வெளியிட்டுள்ளார்

மேலும் பொறியியல் கலந்தாய்வு வரும் 22 முதல் செப்.11 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

பட்டியல்:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம்.

கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், 

வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடம், 

நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம்,

 நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம்.

தரவரிசை பட்டியல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.tneaonline.org/




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback