Breaking News

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு திக் திக்..வீடியோ Trump injured in shooting

அட்மின் மீடியா
0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பரப்புரை நடத்திய போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப், பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். 



அப்போது திடீரென அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வெளியேறும் சத்தம் கேட்டது. உடனே கீழே குனிந்து கொண்ட ட்ரம்பை பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடியே பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர் யார் என்பதை விசாரிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/KailashGWagh/status/1812280831152456066/video/3

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback