வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த பள்ளிவாசல் இமாம் உயிரிழப்பு முழு விவரம் wayanad imam shihab died
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் உடல் அவரது சொந்த ஊரான கூடலூர் அருகே குழியம்பாறைக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் வயநாட்டின் சூரல் மலை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்த கல்யாண குமாரின் உடலும் அவரது சொந்த ஊரான பந்தலூர் அடுத்துள்ள ஐயன்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ஷிஹாப் மத ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் உயிரிழந்தார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஷிஹாப் உடல் பாறை இடுக்கில் இருந்து மீட்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி