மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி ஷாக்கிங் சிசிடிவி வீடியோ வைரல்! woman falling from third floor
அட்மின் மீடியா
0
3வது மாடி சுவரில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவலி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 3வது மாடியில் தனியார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தூய்மை பணியாளராக நகினா தேவி என்ற பெண் பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் அலுவலகத்தில் உள்ள தூய்மை பணிகளை முடித்துவிட்டு தனது சக ஊழியருடன் 3வது மாடி சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய நகினா தேவி கண்ணிமைக்கும் நேரத்தில் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்..இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நகினா தேவி 3வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/mumbaitez/status/1813539006539555115/video/2
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ