பெங்களூரில் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்னை கழுத்தறுத்து கொலை செய்த நபர் அதிர்ச்சிக்குள்ளாகும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சி Woman murdered at a PG accommodation in Bengaluru
பெங்களூரில் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்னை கழுத்தறுத்து கொலை செய்த நபர் அதிர்ச்சிக்குள்ளாகும் சிசிடி வீடியோ Woman murdered at a PG accommodation in Bengaluru
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் விஜிஆர் லேஅவுட்டில் உள்ள பார்கவி தங்கும் விடுதியில் 3 வது மாடியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான கிருத்தி குமாரி என்கிற பெண் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி நள்ளிரவு 11.10 மணி அளவில், இளைஞர் ஒருவர் கிருத்தி குமாரியின் அறைக்கு சென்று கதவை தட்டுகின்றார்
கதவை திறந்து வெளியே வந்த கிருத்திகா குமாரியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்கிறார். கழுத்து அறுபட்ட நிலையில் துடிதுடித்து கிருத்தி குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
உடனடியாக விடுதியில் தங்கி இருந்த மற்ற பெண்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோரமங்களா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தென்கிழக்கு டி.சி.பி., சாரா பாத்திமா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அவரது அடையாளத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர், மேலும் அவரைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கோரமங்களா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/nabilajamal_/status/1816769539771695405?t=gmI_FK0uPsAYV8sqLrhd4g&s=19
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ