யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன் - பதறிய தாய்; பதைபதைக்கும் வீடியோ Youtuber Briyaniman suicide attempt in Youtube live
சமீபத்தில் யூடியூப்பர்களான இர்பான் மற்றும் பிரியாணி மேன் இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து வந்தனர்.
யூடியூப் தளத்தில் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் இர்பான் மற்றும் பிரியாணி மேன் ஆகிய இருவருக்கும் இடையில் கடந்த சிலநாட்களாக கருத்து மோதல் இருந்து வந்தது.
பிரியாணி மேன் இர்பானை பற்றி வீடியோ வெளியிட்டு இருந்தார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இர்பான் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கும் ஒரு ரிப்ளை வீடியோ வெளியிட்டார் பிரியாணி மேன்.
இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரியாணிமேன் யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் மேலும் தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன் என்பவர்தான் என கூறி தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேனை கடைசி நேரத்தில் அவரது தாயார் காப்பாற்றியுள்ளார்
லைவ் வீடியோவில் அவர் இதனை செய்ய முயற்சித்த போது, அதனை பார்த்த அவரின் நண்பர்கள் சிலர், பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்துள்ளார்கள். உடனடியாக தாழிட்டிருந்த அறை கதவை தாயார் தட்டியதால் சாதாரணமாக எதுவுமே நடக்காதது போல இருந்துள்ளார்கள் பிரியாணி மேன். லைவில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/sureshsamy28/status/1817632917264207899
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ