Breaking News

பிரிட்டன் நாட்டில் 1 வாரமாக தொடர்ந்து நடக்கும் கலவரம் 300 பேர் கைது -நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிரிட்டன் நாட்டில் பரவும் வன்முறை நடந்தது என்ன முழு விவரம்

கடந்த ஒருவாரமாக இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் வலதுசாரி மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடந்த ஜூலை 29-ஆம் தேதி, இங்கிலாந்தின் சௌத்போர்ட் நகரத்தில், பாப் பாடகர் டெய்லர் ஸ்விப்ட் 'தீம்'மில் குழந்தைகளுக்கான நடன வகுப்பு நடத்தப்பட்டது. இந்த வகுப்பிற்குள் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர். சரமாரியாக எல்லோரையும் குத்த ஆரம்பித்தார்.

மொத்தம் 11 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கத்திகுத்திற்கு ஆளானார்கள். இவர்களில் பீபி கிங்க்(6 வயது), எல்சி டாட்(7 வயது) மற்றும் ஆலிஸ் டா சில்வா( 9 வயது) என்ற மூன்று குழந்தைகள் பலியானார்கள். தாக்குதலுக்கு உண்டான மற்றவர்களில் 5 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அவர்களில் மூன்று சிறுமிகள் மரணமடைந்துள்ள சம்பவம், நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய பேங்க்ஸ் நகரத்தைச் சேர்ந்த ஆக்ஸெல் ரூடகுபானா என்ற 17 வயது வாலிபரை காவல்துறை கைது பண்ணுவதற்குள் சமூக வலைத்தளங்களில், தாக்கிய நபரைப் பற்றி வதந்திகள் பரவத் தொடங்கின. அதில், தாக்கிய நபர் இங்கிலாந்திற்குப் படகு மூலம் அகதியாக வந்த முஸ்லிம் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஆகஸ்ட் 30-ஆம் தேதி சௌத்போர்ட்டில் உள்ள பள்ளிவாசல்களைக் கலவரக்காரர்கள் தாக்கத் தொடங்கினர். தடுக்க வந்த காவலர்களையும் தாக்கி, கடைகளைச் சூறையாடினர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவரம் பிரிஸ்ட்ல், லண்டன், மான்ச்செஸ்டர், லிவர்பூல் போன்ற நகரங்களுக்கும் பரவியது.

அப்போது ஆரம்பித்த வன்முறை மளமளவென நாடு முழுக்க பரவி இருக்கிறது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக 

300 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், சுண்டர்லேண்ட், மான்செஸ்டர், பிளைமவுத் மற்றும் பெல்ஃபாஸ்ட் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரங்கள் வெடித்தன.

இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதாகப் பரவிய வதந்திகளால் இந்தக் குழப்பமும் கலவரமும் தூண்டப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback