Breaking News

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாறப்போகும் புதிய விதிமுறைகள் என்ன விவரம் New Rules From September 1

அட்மின் மீடியா
0

மத்திய அரசு நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது அதன்படி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சில மாற்றங்களை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Every month, the central government brings changes in some rules in the central government institutions, according to which, from September 1, you can know what are the changes.

 

ஆதார் அப்டேட்:-

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இலவச ஆதார் புதுப்பிப்பு காலத்தை செப்டம்பர் 14 வரை நீட்டித்துள்ளது,

சிலிண்டர் விலை:-

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் வரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. எனவே 3 சதவீதம் உயர்த்தினால் அது 53 சதவீதமாக உயரும்.

புது சிம் கார்டு விதிகள்

போலி அழைப்புகள், போலி செய்திகள் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடுமையான வழிகாட்டுதலை டிராய் வெளியிட்டுள்ளது. 

அதன் படி பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.

அனுப்புனர் தங்களது நம்பர் மற்றும் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.இல்லையென்றால், அந்த எஸ்எம்எஸ்கள் கஸ்டமர்களுக்கு சென்று சேராது.

ஆதார் - பிஎப் கணக்கு இணைப்பு:-

நாளை செப்.1ம் தேதி முதல் ஆதார் மற்றும் பிஎப் கணக்கின் UAN எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் - UAN இணைக்கப்படாத கணக்கிற்கு நிறுவனங்கள் தங்கள் பங்கு பிஎப் பணத்தைக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட மாட்டாது. என ஈபிஎப்ஓ அறிவித்துள்ளது 

சுங்க கட்டணம் உயர்வு:-

சுங்கச்சாவடி கட்டணத்தை பொறுத்தவரை கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.

காசோலை அனுமதி விதிமுறைகள்:-

ரிசர்வ் வங்கி காசோலை பணப் பரிமாற்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் புதிய விதிமுறைபடி அதிகத் தொகை கொண்ட காசோலைகள் பரிமாற்றம் செய்யும் முன்னர், வங்கிகள் காசோலை கொடுத்தவரின் அனுமதியைத் தனியாகப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback