Breaking News

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 100 கிராம் எடையால் பறிபோன பதக்கம் நடந்தது என்ன முழு விவரம் VineshPhogat

அட்மின் மீடியா
0

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 100 கிராம் எடையால் பறிபோன பதக்கம் நடந்தது என்ன முழு விவரம்

 


நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியாக, இதயங்களை நொறுக்கும் சம்பவமாக அமைந்துள்ளது.முன்னதாக, 

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். 

இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்:-

ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்த போட்டி 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இரவு முழுவதும் இந்திய அணியினரின் கடுமையான பிரயத்தனங்களையும் தாண்டி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் 50 கிலோவையும் தாண்டி எடை கொண்டிருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக இப்போதைக்கு வேறு விவரங்கள் ஏதும் குழுவினரால் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறோம். இப்போதைக்கு இனி கையில் உள்ள போட்டிகளில் இந்திய குழு கவனம் செலுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

மல்யுத்த போட்டிகளை பொறுத்தவரை, ஒரு வீரர் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் அவரது உடல் எடை பரிசோதிக்கப்படும். அதில், வீரர் கலந்துகொள்ளும் குறிப்பிட்ட எடைப்பிரிவுக்குள் அவரது உடல் எடை இருக்க வேண்டும். எடைப்பிரிவுக்கு கூடுதலாக ஒரு கிராம் எடை அதிகரித்து இருந்தாலும், கூடுதல் எடை உள்ளதாக அந்த வீரர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பது விதிமுறையாகும்.

கடந்த ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய வினேஷ் போகத், இம்முறை 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback