Breaking News

குளத்தின் படிக்கட்டுக்கு ரூ11 லட்சமா? அனிதா சம்பத்துக்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

குளத்தின் படிக்கட்டுக்கு ரூ11 லட்சமா? அனிதா சம்பத்துக்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் முழு விவரம்



குளத்தின் படிக்கட்டுக்கு ரூ11 லட்சமா? என கேட்ட நடிகையும் தொகுப்பாளருமான அனிதா சம்பத்துக்கு தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்

செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று தற்போது சீரியலில் நடிகையாக நுழைந்திருப்பவர் அனிதா சம்பத். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 12 லட்சத்தில் சிலர் வீடே கட்டுகிறார்கள் எனக் கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு  காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2022-23ம் ஆண்டில், திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன எனவும் அதற்க்கான செலவினங்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு 

தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு  வெளியிட்டுள்ள செய்தி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1819214613982183578

Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Give Us Your Feedback