Breaking News

சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ஆகஸ்டு 14 ம் தேதி வரை ரத்து முழு விபரம்

அட்மின் மீடியா
0

சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ஆகஸ்டு 14 ம் தேதி வரை ரத்து முழு விபரம்

பாரமரிப்பு காரணங்கள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று  முதல் வரும் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. 

இதனால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10.00 மணி முதல் 11.59 வரையும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் முழுமையாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கடற்கரையில் இருந்து செல்லும் ரயில்கள் பல்லாவரம் ஸ்டேஷன் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரும் ரயில்கள், கூடுவாஞ்சேரி ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை  கடற்கரையிலிருந்து காலை 9.30 முதல் பகல் 12.45 மணி வரையும், மறுமார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் பிற்பகல் 1.42 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. 

மேலும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக பல்லாவரத்திலிருந்து இரவு 11.30, 11.55 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 முக்கியமாக, தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 8.26, 8.39 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில், பொது ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் சென்னை சென்ட்ரல் மூா் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்றும் திங்கட்கிழமை (ஆக.3, 5) ரத்து செய்யப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback