Breaking News

காய்ச்சல், வலி , அலர்ஜி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
காய்ச்சல், வலி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டாமல் கலவை உட்பட 156 நிரந்தர மருந்து கலவைகளுக்கு தடை

காய்ச்சல் மற்றும் சளி, வலி ​​நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 நிலையான டோஸ் கலவை மருந்துகளை அரசாங்கம் வியாழக்கிழமை தடை செய்தது , அவை 'மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது என live mint செய்தி வெளியிட்டுள்ளது



மத்திய அரசு தற்போது பாரசிட்மல் உள்ளிட்ட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.அதாவது காய்ச்சல், தலைவலி மற்றும் உடம்பில் ஏற்படும் வலி போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் பாரசிட்மல் மாத்திரைகள் உட்பட 156 மருந்து வகைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த மருந்துகள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிரபல மருந்தான Aceclofenac 50mg+paracetamol 125mg மாத்திரையை தடை செய்துள்ளது. 

இதேபோன்று பாராசிட்மல் வகையை சேர்ந்த 156 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் இந்த மருந்துகளுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும் நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை தடை செய்வது பொது நலன் கருதி அவசியமானதும் பயனுள்ளதுமாகும் என மத்திய அரசு கூறியுள்ளது

The list also includes

Mefenamic Acid + Paracetamol Injection, 

Cetirizine HCI + Paracetamol + Phenylephrine HCI, 

Levocetirizine + Phenylephrine HCI + Paracetamol, 

Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine, and Camylofin Dihydrochloride 25 mg + Paracetamol 300mg.


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback