Breaking News

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து 15 ஆண்டுகளாக அரியர் தேர்வு உள்ளதா? மீண்டும் தேர்வெழுத அரிய வாய்ப்பு

அட்மின் மீடியா
0

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து 15 ஆண்டுகளாக அரியர் தேர்வு உள்ளதா?மீண்டும் தேர்வெழுத அரிய வாய்ப்பு

 


அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆக.30 முதல் செப்.18 வரை விண்ணப்பிக்கலாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத வாய்ப்பு 

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு

அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் விதிமுறைகள் படி, ஒருவர் டிகிரி முடித்த 3 ஆண்டுகளுக்குள் அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், பெற்ற டிகிரி ரத்து செய்யப்படும். இப்படி, அரியர் எழுதாமல் டிகிரியை இழந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துக்கொண்டு மீண்டும் தேர்வெழுதி டிகிரியை பெறலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு டிகிரியை பெறமுடியும்.

இவர்களுக்கு நவம்பர்/டிசம்பர் 2024 மற்றும் ஏப்ரல்/மே 2025 ஆகிய கல்வி ஆண்டில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு அரியர் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் https://coe1.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 30.08.2024ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கு 18.09.2024ஆம் தேதி மாலை 4 மணி வரை பெறப்படும். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு அரியர் எழுத ஒரு தேர்விற்கு ரூ.5,000 கட்டணமாக ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். மேலும், கூடுதலாக ஒவ்வொரு தாளுக்கான தேர்வு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். தேர்விற்கான கால அட்டவணை, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையம் ஆகிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவர்கள் தேர்விற்கான விண்ணப்பங்களை https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்விற்கான கட்டணத்தை டிடி மூலம் செலுத்தி தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுபாடு அலுவலகத்திற்கு 25.09.2024ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இதுகுறித்த விவரங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://aucoe.annauniv.edu/downloads/Special-Arrear-Other-University-23.08.2024.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback