Breaking News

ஆகஸ்டு 17ம் தேதி வரை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் எந்த எந்த ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆகஸ்டு 17ம் தேதி வரை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் எந்த எந்த ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில விரைவு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 17ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.



இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

 திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆக.16-ம் தேதி இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய பொதிகை விரைவு ரயில் (12661), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரிக்கு ஆக.16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (12633), எழும்பூர் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

செங்கோட்டை - சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் பொதிகை விரைவு ரயில் (12662), செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில், செங்கல்பட்டில் நிறுத்தப்படும்.



திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு ஆக.15, 16 ஆகிய தேதிகளில் புறப்படும் விரைவு ரயில் (12632), செங்கல்பட்டு - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரி - சென்னை எழும்பூருக்கு ஆக.15-ம் தேதி புறப்படும் விரைவு ரயில் (12634), செங்கல்பட்டு -எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு ஆக.14-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (12641), விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக திருப்பிவிடப்பட உள்ளது.

ஹவுரா - திருச்சிராப்பள்ளிக்கு ஆக.15-ம் தேதி விரைவு ரயில் (12663), பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக திருப்பிடப்படும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம் மார்க்கத்தில் செல்லாது.

சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு ஆக.17-ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (16175), 1.25 மணி நேரம் தாமதமாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback