Breaking News

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத 189 உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் வீடியோ இணைப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத 189 உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் முழு விவரம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது. 


 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவோடு, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி ஆகிய கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்தன. 

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக இன்று தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர், தன்னார்வளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

உயிரிழந்த 387 பேரில் இதுவரை 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் அடையாளம் தெரியாத 8 பேரின் உடல்கள் நேற்று ( ஆக.4) ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. 

மீதம் இருப்பவர்களில் அடையாளம் காண முடியாதவர்களின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 180 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரள அமைச்சர் கே ராஜன் செய்தியாளர் சந்திப்பில் 

220 உடல்களுடன், 160 உடல் உறுப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 34 அடையாளம் தெரியாத சடலங்கள் உள்ளதாகவும், 171 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்."இன்று மலப்புரத்தில் இருந்து ஒரு உடல் மற்றும் சூஜிப்பாராவில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. பல்வேறு படைகளைச் சேர்ந்த 1382 உறுப்பினர்கள் மற்றும் சுமார் 1800 தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்" என்று கேரள அமைச்சர் கூறினார்

கேரளாவின் வயநாட்டில்  31 உரிமை கோரப்படாத அடையாளம் தெரியாத உடல்கள், 158 உடல் உறுப்புகள் புதைக்கப்பட உள்ளன.அனைத்து முக்கிய மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதகுருமார்கள் குழு அடக்கம் செய்யப்படுவதற்கு முன் கூட்டு பிரார்த்தனைகளை வழங்குவார்கள்.உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. எண்கள், அந்தந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் பலகையில் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுவதால், கேரளாவின் வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளை எட்டியுள்ளன.முன்னதாக, நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மாலா மற்றும் முண்டக்கை பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அல்லது பகுதிகளுக்கு இரவில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மீட்புப் பணிகளுக்காக காவல்துறையின் அனுமதியின்றி இரவு நேரங்களில் யாரும் இந்த இடங்களில் உள்ள வீடுகள் அல்லது பகுதிகளுக்குள் நுழையக்கூடாது.

உரிமை கோரப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகளை மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை தகனம் செய்யும் என வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=pO_m2-aNyjc

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback