Breaking News

1937 ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த சட்டமன்ற தொழுகை இடைவேளை ரத்து அசாம் அரசு அறிவிப்பு முழு விபரம் Assam Assembly Ends Break for Friday Namaz Prayers

அட்மின் மீடியா
0

1937 ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த சட்டமன்ற தொழுகை இடைவேளையை ரத்து செய்த அசாம் அரசு  முழு விபரம் The Assam government has abolished the assembly prayer break which has been in place since 1937

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை செய்வதற்காக வெள்ளிக்கிழமைகளில் விடப்படும் 2 மணிநேர இடைவேளையை ரத்து 


அஸ்ஸாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகை செய்வதற்காக காலை 11 மணிக்கு இடைவேளை விட்டு, பின்னர் மதிய உணவுக்குப் பிறகு விவாதங்களைத் தொடங்குவது நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். 

இந்த நடைமுறை 1937-ல் முஸ்லிம் லீக் கட்சியின் சையது சாதுல்லாவால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும் எனவும் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகின்றது எனவும் மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்று அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் :-

2 மணி நேர ஜும்மா இடைவேளையை நீக்கியதன் மூலம், அஸ்ஸாம் சட்டமன்றம் உற்பத்தித்திறனுக்கு முன்னுரிமை அளித்தது மற்றும் காலனித்துவ சாமான்களின் மற்றொரு அடையாளத்தை அகற்றியுள்ளது. இந்த நடைமுறை 1937 இல் முஸ்லீம் லீக்கின் சையது சாதுல்லாவால் அறிமுகப்படுத்தப்பட்டது என குறிபிட்டுள்ளார்

அசாம் முதல்வர் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/himantabiswa/status/1829443011656167666

Assam CM Himanta Biswa Sarma tweets, "By doing away with the 2-hour Jumma break, Assam Assembly has prioritised productivity and shed another vestige of colonial baggage. This practice was introduced by Muslim League’s Syed Saadulla in 1937

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback