Breaking News

சவூதி பாலைவனத்தை சுற்றி பார்க்க சென்ற 2 பேர் வழி தெரியாமல் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்தது என்ன முழு விவரம் Indian man dies of dehydration in Saudi Arabia's Rub' al Khali desert

அட்மின் மீடியா
0
சவூதி பாலைவனத்ததை சுற்றி பார்க்க சென்ற 2 பேர் வழி தெரியாமல் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்தது என்ன முழு விவரம் Indian man dies of dehydration in Saudi Arabia's Rub' al Khali desert

 

 
இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் கரீம் நகரை சேர்ந்த முகமது ஷெஹ்சாத் கான் என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள பிரபல டெலிகாம் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

முகமது ஷெஹ்சாத் கான் தன்னுடன் பணியாற்றும் சூடான் நாட்டை சேர்ந்த ஒருவருடன் காரில் ரப் அல் காலி பாலைவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கே நடு வழியில் இவரது ஜிபிஎஸ் சிக்னல் செயலிழந்து உள்ளது. இதனால் எப்படிச் செல்வது என்று தெரியாமல் அவர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். மேலும் அவர்களின் மொபைலிலும் பேட்டரி காலியாகி ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. இந்த ரப் அல் காலி பாலைவனம் சுமார் 650 கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் பிரம்மாண்ட பாலைவனமாகும். 

 
ஜிபிஎஸ் இல்லாததாலும் மற்ற்வர்களை தொடர்பு கொள்ள போன் இல்லாததாலும் குழம்பிய அவர்கள் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளனர். இதனால் பெட்ரோல் தீர்ந்து அவர்கள் பாலைவனத்திலேயே சிக்கியுள்ளனர். 
 
இப்படி உணவும், தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து 4 நாட்கள் அவர்கள் அங்கேயே அலைந்து  இருவரும் பாலைவனத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
உடன் பணியாற்றும் நபர்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், சுமார் நான்கு நாட்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அவர்கள் உடல்கள் பாலைவனத்தில் அவர்களின் வாகனத்தின் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback