Breaking News

மேற்கு வங்கத்தை 2 ஆக பிரிப்பதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் மம்தா அதிரடி

அட்மின் மீடியா
0

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதிகளை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளை வடகிழக்கு மண்டல வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர கொண்டு வரவேண்டும் என்று மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தார் கோரிக்கை விடுத்தார்.  மேலும் தொடந்ர்து பாஜ தலைவர்களும் வடக்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 



இந்நிலையில் மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு எதிராக பேரவையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேற்குவங்க மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை என்ன விலை கொடுத்தாவது தடுப்பேன் என்றார்.டார்ஜிலிங்கை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் வட மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இன்று மேற்குவங்க சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு தீர்மானம் நிறைவேறியுள்ளது

இது குறித்து முதல்வர் மம்தா பேசியது, இந்திய சுதந்திரத்திற்காக போராடியது மேற்கு வங்கம். நம் மாநிலத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம் இது. மாநில வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback