தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை முழு விபரம்
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை முழு விபரம்
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019ம் ஆண்டு பாமக பிரமுக ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவான 6 பேரை பிடிக்க போலீஸார் திவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்