Breaking News

சென்னையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 25 % மானியத்தில் சிறப்பு தொழில் கடன்விழா முழு விவரம்

அட்மின் மீடியா
0
சென்னை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன்விழா ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார். 
 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 1949 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அன்று முதல் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழில் அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. 
 
அண்ணா சாலை நந்தனத்தில் இயங்கி வரும் கழகத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன்விழா ஆகஸ்ட் 19 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
 
இந்த சிறப்பு தொழில்கடன் விழாவில் TIIC Ltd இன் பல்வேறு நிதித்திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் அரசு மானியங்கள் குறித்து விளக்கம் தரப்படுகிறது. மேலும் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் (மானிய தொகை அதிகபட்சமாக ரூபாய் 150 லட்சம் வரை) நிதி உதவி வழங்கப்படுகிறது. 
 
முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர் பயன்படுத்தி தொழில் திட்டங்கள் குறித்த விபரங்களுடன் வருகை தந்து மேற்படி சிறப்பு தொழில்கடன் விழாவுக்கு வருகை தந்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/08/2024081484.pdf

Special Professional Loan Festival from 19th August to 6th September for Micro, Small and Medium Enterprises in Chennai District

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback