Breaking News

வங்கதேசம் நட்சத்திர ஓட்டலுக்கு தீவைத்ததில் 25 பேர் உயிரிழப்பு! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

வங்கதேசம் நட்சத்திர ஓட்டலுக்கு தீவைத்ததில் 25 பேர் உயிரிழப்பு! வீடியோ இணைப்பு

வங்கதேசத்தில் ஓட்டலில் இருந்த 25 பேரை கலவரக்காரர்கள் எரித்துக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய நிலையில் அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஷாஹின் சக்லதாருக்கு சொந்தமான ஓட்டலுக்கு தீவைத்ததில் 25 பேர் உயிரிழப்பு வங்கதேசம் முழுவதும் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான பல வர்த்தக நிறுவனங்களும், வீடுகளும் கலவரக்காரர்களால் தீ வைத்து எரிப்பு

 


 

போராட்டகாரர்கள் அவாமி கட்சியின் மத்திய அலுவலகம், அவாமி கட்சியின் பல தலைவர்களின் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் ஒரே நேரத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், அவாமி கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்தார்.

ஜெசோர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். அதில் 25 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வீடியோ இணைப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AlertaMinuto/status/1820785863476773020

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback