Breaking News

ஒரு நாளைக்கு ₹28,000 சம்பளம் - எலான் மஸ்க்கின் டெஸ்லாவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் tesla Data Collection Operator

அட்மின் மீடியா
0

ஒரு நாளைக்கு ₹28,000 சம்பளம் - எலான் மஸ்க்கின் டெஸ்லாவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் tesla Data Collection Operator


உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவன உரிமையாளர் ஆவார்

டெஸ்லா நிறுவனம் மனிதர்களை போன்ற ஹ்யூமன் ரோபோக்களை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த  ரோபோக்களுக்கு மனிதர்களின் நடை, உடை, பாவணை உள்ளிட்டவற்றை கற்றுத்தருவதுதான் அந்த வேலை. இதற்கென தரப்படும் உடை, வி ஆர் ஹெட் செட் ஆகியவற்றை அணிந்து கொண்டு 7 மணி நேரமும் பல்வேறு வகையான மனிதர்களின் செயல்பாடுகளை செய்ய வேண்டும். இந்த  ஆராய்ச்சி பணிகளுக்காக வேலைகளுக்கு எலான் மஸ்க் ஆள் எடுத்து வருகிறார். டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில பணி செய்யவேண்டும்.

ரோபோக்களை நாள் முழுவதும் கண்காணித்து, அதற்கு பயற்சியளிக்கும் Data Collection Operator பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹4,000-ம், நாள் ஒன்றுக்கு ₹28,000ஊதியம் வழங்கப்படும் என டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

7 மணி நேரம் ரோபோக்களுடன் செலவிட்டு அதன் செயல்பாடுகள் குறித்த தரவுகளை சேகரிக்க வேண்டும். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள உடை மற்றும் VR உபகரணங்களை அணிய வேண்டும். உயரம் 5'7"-ல் இருந்து 5'11"-க்குள் இருக்க வேண்டும்.எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

 பணி:-

தரவு சேகரிப்புக்கு தினமும் முன் தீர்மானிக்கப்பட்ட சோதனை பாதையில் நடக்கவும்

திட்டத் தேவைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இயக்கங்கள் மற்றும் செயல்களைச் செய்யும்போது மோஷன் கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணியுங்கள்

ரெக்கார்டிங் சாதனங்களைத் தொடங்கவும்/நிறுத்தவும் மற்றும் சிறிய உபகரணங்கள் மற்றும் மென்பொருள் பிழைத்திருத்தத்தை செய்யவும்

உபகரணங்களின் செயல்திறன் பற்றிய கருத்துக்களை வழங்கவும்

மாற்றத்தின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து புகாரளிக்கவும்

சேகரிக்கப்பட்ட தரவைப் பதிவேற்றவும் மற்றும் அவதானிப்புகள் மற்றும் சிக்கல்களை விவரிக்கும் தினசரி அறிக்கைகளை எழுதவும்

ஒதுக்கப்பட்ட உபகரணங்கள் சரியான மற்றும் பாதுகாப்பான வேலை நிலையில் இருப்பதையும், பல்வேறு சேகரிப்பு தளங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவதையும் உறுதிப்படுத்தவும்

சரியான நேரத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எழும்போது தலைமையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

கூடுதல் விவரங்களை டெஸ்லா பக்கத்தில் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.tesla.com/careers/search/job/data-collection-operator-tesla-bot-night-shift-223213

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback