Breaking News

வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆராய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பு திமுகவின் 2 எம்பிக்களுக்கு இடம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வக்ப் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மக்களவையில் இதுதொடர்பான திருத்த மசோதா நேற்று ஆகஸ்ட் 8  ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த மசோதாவிற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 



இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டு குழுவில் திமுகவின் 2 எம்பிக்கள் உள்பட 31 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கூட்டு குழுவில் லோக்சபாவின் 21 எம்பிக்கள், ராஜ்யசபாவின் 10 எம்பிக்கள் என 31 பேர் இடம்பெறுகின்றனர். 

இதில் திமுக சார்பில் லோக்சபா எம்பி ஆ ராசா, ராஜ்யசபா சார்பில் எம்எம் அப்துல்லா ஆகியோர் நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம் பிடித்துள்ளனர்.அதில் 

பாஜக சார்பில் 

லோக்சபா எம்பிக்களான ஜெகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அபராஜித் சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், தலிப் சாய்கியா, அபிஜித் கங்கோபாத்யா, டிகே அருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

சமாஜ்வாதி கட்சி சார்பில்

மவுலான மொஹிபுல்லா, 

சிவசேனா சார்பில்:-

 நரேஷ் கன்பத் மஸ்கி, 

லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்)  சார்பில்:-

அருண் பாரதி, 

காங்கிரஸ் சார்பில் 

கவுரவ் கோகோய், இம்ரான் மசூத், முகமது ஜாவித், 

ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் 

அசாதுதீன் ஓவைசி 

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 

கல்யாண் பானர்ஜி, 

தெலுங்கு தேசம் கட்சி சார்பில்

ஸ்ரீகிருஷ்ணதேவ ராயலு, 

ஐக்கிய ஜனதாதளம் கட்சி சார்பில்:-

தில்லேஷ்வர் காமைத், 

சிவசேனா உத்தவ் அணி சார்பில்:-

அரவிந்த் சாவந்த், 

தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி சார்பில்:-

 சுரேஷ் கோபிநாத், 

என 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிந்துரையின் ஆய்வறிக்கை என்பது அடுத்து நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டு குழு தனது அறிக்கையை அளிக்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback