பீஹாரில் அதிர்ச்சி - தனியார் பள்ளியில் 3 வது படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது மாணவன் வீடியோ இணைப்பு
பீஹாரில் அதிர்ச்சி - தனியார் பள்ளியில் 3 வது படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது மாணவன் வீடியோ இணைப்பு
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்ற 5 வயது மாணவன் 3ம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து காயம் அடைந்த மாணவன் கூறுகையில், நான் எப்போதும் போல வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது என் முன் வந்து நின்ற அந்த சிறுவன், தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்தான். பொம்மை துப்பாக்கி என நினைத்தேன். அதற்குள் என் கையில் சுட்டு தப்பி விட்டான். எனக்கும் அந்த சிறுவனுக்கு எந்த சண்டையும் இல்லை,' என்றான்.
சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனையிட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் அச்சத்தில் பள்ளிக்கு ஓடி வந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/gharkekalesh/status/1818632712988901466
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ