Breaking News

பிரதமர் ஹசினா பதவி விலககோரி வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை 32 பேர் பலி

அட்மின் மீடியா
0

பிரதமர் ஹசினா பதவி விலககோரி வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை 32 பேர் பலி

 


சென்ற மாதம் நாடுமுழுதும் அரசாங்கப் பணிகளுக்கான வேலை ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.அப்பொழுது ஏற்பட்ட வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மாண்டோரின் குடும்பங்களுக்கு நீதி வேண்டும், நடந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்று கோரி, வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் தலைநகர் டக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட கொடிகளுடன் “எங்களுக்கு நீதி வேண்டும்” என்ற கோஷமிட்டபடி மாணவர்கள் அணிவகுத்துச்சென்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாவட்ட அலுவலகக் கட்டடத்திலும் காவல்துறையின் கண்காணிப்பு சாவடியிலும் தீ முட்டப்பட்டது. 

போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களைக் கலைக்க காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர் புகையையும் பயன்படுத்தியத்தி போரட்டத்தை கலைத்தனர்

பங்ளாதேஷ் 1971ல் பாகிஸ்தானுடன் சுதந்திரத்துக்காக நடத்திய போரில் போராடியோரின் குடும்பத்தினருக்கு அரசாங்க பணிகளில் 30 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை எதிர்த்து சென்ற மாதம் அந்தப் போராட்டங்கள் மாணவர்களின் தலைமையில் வெடித்தன.இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு:- போராட்டங்கள் கையைவிட்டுப் போய் இருக்கும் சூழலில், நிலைமையை சமாளிக்க அங்கே மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், அதைத் தாண்டி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback